நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல் மூலம் தெரிவான புதிய அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளதுடன் புதிய உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தகவல் தருகையில்,“புதிய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று நள்ளிரவுக்குள் வெளியிட முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.








