வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலைய புதிய நிர்வாக சபைத் தெரிவு – 2014

0
492 views

 

வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தின் பொதுக்கூட்டமானது இன்று (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இக் கூட்டமானது தலைவர் லெ.கிருபாகரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம் பெற்று பின்னர் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்று கூட்டமானது 12.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயமாக .பல ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டு இயங்கி வந்த எமது நூலகம் சுனாமி பேரலையின் மூலமாக முற்றாக அழிவடைந்தது. 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய சன சமூக சேவா நிலையத்தில் கடந்த 2 வருடங்களாக தினப்பத்திரிகைகளும் வாரப்பத்திரிகைகளுமே வைக்கப்பட்டிருந்தன டிசம்பர் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து  மீண்டும் பல நூல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படுவதாகவும் கலந்தரையாடப்பட்டது.
இங்கிலாந்து உதயசூரியன் கழக அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட புத்தகங்களும் இந்தியாவில் இருந்து இ.இராசேந்திரம் அவர்களால் வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் சிறுவர் புத்தகங்கள் என்று சுமார் 750 புத்தங்களை கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.  இப்புத்தகங்களில் பிரபல எழத்தளர்கள் ரமணிச்சந்திரன், லக்ஷ்மி,கல்கி, சாண்டில்யன், முத்துலட்சுமிஇ பரிமளா, இராஜேந்திரன், இலக்கியா, வெங்கடராமன்  ஆகியோரின் புத்தகங்களுடன் சிறுவர்களுக்கான புத்தகங்களும் உள்ளன. வல்வை மக்கள் அனைவரும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படித்துவிட்டு வாராவாரம் புதிய புத்தகங்களை மாற்றி பெற்றுக்கொள்ளலாம்

புதிய நிர்வாக சபை விபரம் :-(இடமிருந்து வலமாக)
திரு.வி.கவிச்செல்வன், திரு.ர.குவேந்திரன், திரு.பா.உதயகுமார்(பொருளாளர்), திரு.சி.தவராசா(தலைவர்), திருமதி கு செல்வராணி(செயலாளர்), திரு.இ.மயூரதரன், திரு.த.சுதர்சன், திரு.த.சிவகுமார், திரு.அ.வசீகரன்.

 

 

புதிய நிர்வாக சபை விபரம் :-(இடமிருந்து வலமாக)
திரு.வி.கவிச்செல்வன், திரு.ர.குவேந்திரன், திரு.பா.உதயகுமார்(பொருளாளர்), திரு.சி.தவராசா(தலைவர்), திருமதி கு செல்வராணி(செயலாளர்), திரு.இ.மயூரதரன், திரு.த.சுதர்சன், திரு.த.சிவகுமார், திரு.அ.வசீகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here