வளர்தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு 2016 / 2017

0
642 views

வளர்தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு  2016 / 2017

 தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை  பிரித்தானியக்கிளையின்  14 வது வளர்தமிழ் பாடநூல் ஆசிரியர் பயிற்சி செயலமர்வும் தமிழ் இலக்கியமாணி விளக்கங்களும் இனிதே ஆரம்பமாகியது. 700 மேற்பட்ட ஆசிரியர்களை தன்னகத்தே கொண்;ட இப் பேரவை இவ்வருடம் மூன்று அமர்வுகளாக நடாத்துகின்றது முதல் அமர்வு இன்று 29.10.2016  வழமையாக நடைபெறும் Canons HighSchool Shaldon Road Edgware HA8 6AN என்னும் இடத்தில் தொடங்கியது. இங்கு மழலையர் நிலை முதல் வளர் தமிழ் 4 வரை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான கற்பித்தல் உத்திகள்  தகுதிவாய்ந்த ஆசிரியர்களினால் வழங்கப்பட்டன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வாழிடப்பள்ளியில் நடப்பது போன்று காட்சிப்படுத்தலுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவை பெரிதும் வரவேற்கப்பட்டன. இது தங்களை  மேலும் வளப்படுத்தும் என இதில் கலந்துகொண்ட 350 மேற்பட்ட ஆசிரியர்கள் கூறிக்கொண்டனர்.இதனை ஊக்குவிக்கும் முகமாக உலகத்தமிழர் கல்வி மேம்பாட்டுபேரவையின் பொறுப்பாளர் திருமதி நகுலா அரியரட்ணம் அவர்களின் உரையும் அமைந்திருந்தது.

நாளையும் இதே இடத்தில் இரண்டாவது அமர்வும் நடைபெற உள்ளது இதிலும் 250மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அன்று வளர்தமிழ் 5 முதல் வளர்தமிழ் 12 வரைகற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் உத்திகள்; வழங்கப்படவுள்ளன.மேலும் தேர்வுத்தாள்களகள் தொடர்பான அறிவுறுத்தல்களும் சூ யோ  பற்றிமாகரன் அவர்களினால் கேம்பிறிச் GCE(O/L) &GCE(A/L) தேர்வுகள் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளது. அதே நேரம் இந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்து தமிழ் இலக்கியமாணி கற்கைநெறி பற்றிய விளக்கங்களை 3 அமர்விலும் எடுத்து விளக்கவுள்ளார்  கடந்த வருடம் 100 மேற்பட்டவர்கள்  1ம் ஆண்டு தமிழ் இலக்கியமாணி தேர்வில் கலந்து கொண்டு சித்தியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலருடைய வேண்டுகோளுக்கிணங்க  3வது அமர்வு லண்டனுக்கு வெளியில் உள்ள  Indian Community 243 Centre  243 Cross Road  Coventry West Midland CV6 5GP  என்ற இடத்தில் 06.11.2016 காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது இங்கு மழலையர் நிலை முதல் வளர்தமிழ் 12 வரை ஆசிரியர் செயலமர்வு நடைபெறவுள்ளது இங்கும் 100 மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குபற்றவுள்ளார்கள் மேலே நடந்த செயலமர்வுகளில் பங்கு பெறத்தவறியவர்கள் இங்கு பங்கு பற்றி தமது கற்பித்தல் வளத்தை பெருக்கிக்கொள்ளலாம் என பேரவை விரும்புகின்றது மேலும் இந்த செயலமர்வுகளில் தமிழ் இலக்கியம் இலக்கணம் வரவாறு தமிழ் திறன் போட்டிகளுக்கான முன்னறிவித்தல்கள்  விளக்கங்கள் என்பனவும் நடைபெற்றன. குறிப்பாக இச்செயலமர்வில் வளர்தமிழ் ஆசிரியர்களை ஒருங்கிணைத்தல் மாணவர் மீதான மதிப்பீடுகளை மீள்பார்வை செய்தல் தேடல் பரிமாறல் என பல பயன்களை பெற முடிந்தது என முதலாவது அமர்விலேயே ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் இறுதியாக புலம்பெயர் மண்ணில் எமது தாய் மொழியாம் தமிழ் அழிந்துவிடாமல் காத்து எமது எதிர்காலச்  சந்ததியிடம் ஒப்படைக்கும் பாரிய பணியைச் செய்யும் ஒவ்வொருவருக்கும் பிரித்தானியக்கிளை கல்வி மேம்பாட்டுப்பேரவை பொறுப்பாளர் திரு ஞானி நன்றி தெரிவித்தது நிறைவைத்தந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here