அர்ச்சனாவுக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து

0
343 views

வல்வையின் முதலாவது பெண் விமானி என்று பாராட்டப்பட்டுள்ள அர்ச்சனா செல்லத்துரைக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து தெரிவித்தது.

வல்வை ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் இராமதாசன் வைரமுத்து அவருடைய இல்லம் சென்று நேரடியாகச் சந்தித்து மலர்ச்செண்டும்இ வல்வை மக்களின் வாழ்த்துச் செய்தி அடங்கிய மடலும் வழங்கினார்.

வல்வையில் மட்டுமல்ல டென்மார்க்கிலும்இ யாழ் குடாநாட்டிலும் பெண்களில் இருந்து உருவாகியிருக்கும் விமானி என்பது தமக்கு மகிழ்வு தருவதாக வல்வை ஒன்றியம் சார்பில் தெரிவித்தார்.

அர்ச்சனாவை தொடர்ந்து மேலும் பல பெண்கள் விமானிகளுக்கான கல்வியை கற்பதற்கு களமிறங்குவார்கள் என்று குறிப்பிட்ட இராமதாசன்இ இது போன்ற முன்னோடிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் அத்தருணம் கூறினார்.

கப்பல் மாலுமிகளாக வல்வை மக்கள் படைத்துவரும் சாதனைகள் ஆகாயத்திலும் புகழ் பெற வேண்டுமானால் விமானிகளாக அதிகமான பெண்கள் கல்வி கற்க முன்வரவேண்டும்.

எதிர்கால உலகம் விமானங்களால் நிறைந்த ஆகாயமாக மாறப்போகிறதுஇ ஆகவே நமது கல்விச்சிந்தனைகள் புதிய தளங்களில் விரிவாக்கம் பெற வேண்டும் என்றும் அர்ச்சனா தெரிவித்தார்.

வல்வை சென்று மறுபடியும் அங்குள்ள மக்களை பார்ப்பது தனது ஆவல் என்ற அர்ச்சனா செய்திகளால் முதன்மைப்படுத்திய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

வல்வெட்டித்துறைக்கு 2005ம் ஆண்டு ஒரு தடவை வல்வைக்கு வந்துள்ளேன்இ வல்வை மக்களும்இ வல்வை மக்களின் ஊடகங்களும்இ நலன்புரிச்சங்கங்களும் தனக்கு வழங்கியுள்ள ஆதரவு என்றும் மறக்க முடியாதது என்றும் அத்தருணம் அர்ச்சனா தெரிவித்தார்.

வல்வையின் வரலாற்றில் எண்ணற்ற பெண்கள் சாதனை படைத்துள்ளார்கள்இ அன்னபூரணி என்ற கப்பல் கூட வல்வை பெண்களின் அடையாளமாகவே உள்ளது.

உங்கள் ஆதரவு சாதனைகள் தொடர உற்சாகம் தருவதாகவும் கூறுகிறார் அர்ச்சனா..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here