வல்வெட்டித்துறை பிரதேசத்தில் கெருடாவில் வடக்கு கிராமசேவகர் பிரிவில் உள்ள நிக்குளு குளத்தின் நீரை அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றுவதனால் இதனை நம்பp பயிரிடப்பட்ட 25 ஆயிரம் வெங்காயம் அழிவடையும் அபாயத்தை எட்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இக் குளத்தின் கீழ் பயிர்ச் செய கையில் ஈடுபடும் 14 விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்
இக்குளத்தினைச் சுற்றி 50 ஆயிரம் கண்டு பயிரிடக் கூடிய நிலம் மட்டுமே உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டும் தற்போது இக் குளத்தினையும் அருகில் உள்ள ஒரு சில கிணற்றினை நம்பியும் 25 ஆயிரம் ஙெங்காயம் பயிரிடப்பட்டுற்ளது. 3 ஆயிரம் வெங்காயம் பயிர்ச் செய்கை பண்னுவதற்கே ஒரு லட்சம் ரூபா செலவு ஏற்படும் நிலையில் 25 ஆயிரம் பயிர் நாட்டப்பட்டுள்ளது.
இக்குளத்தில் இருந்தே தற்போது நீர் பாச்சப்படுவதனால் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நீர் முழுமையாக வற்றிவிடக் கூடிய சூழலே காணப்படும் நிலையில் அதிகாரிகள் நேற்றுமுதல் இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றுகின்றனர். இதனால் எமது பயிர்கள் நீரின் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக் குளப் புனரமைப்பிற்காகவும் 8 லட்சம் ரூபா பணம் மட்டுமே கிடைத்துள்ளதோடு அதில் மற்றைகள் துப்பரவிற்கு 2 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மிகுதிப்பணமான 6 லட்சம் எனில் அதற்கு இயந்திரப் பணிகள் 4 அல்லது 5 தினங்களே மேற்கொள்ள முடியும் என்பதனால் இப்படிகளை செப்டம்பர் மாத்த்திலும் மேற்கொள்ள முடியும்.
ஆகவே எமது நிலமையினைக் கருத்தில்க் கொண்டு குளத்து நீரினை வீண் விரயம் செய்யாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரியுமாறு கோரிநிற்கின்றோம். என்கின்றனர்.
விவசாயிகளின் குறித்த கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இ
குறித்த குளப்புணரமைப்பு தொடர்பில் விவசாயிகளிற்கும் தகவல் வழங்கப்பட்டது . இருப்பினும் மேற்படி குளப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதிமூலம் குறுகிய நாட்களில் பணியை நிறைவு செய்ய முடியும் என்பதன் அடிப்படையிலும் விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்டுள்ளமையினாலும் இது தொடர்பில் உடனடியாக உரிய கவணம் செலுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் இடம்பெற ஆவண செய்யப்படும்.
இவ்வாறு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள குறித்த பிரதேச விவசாயிகள் அதற்கான ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க முடியும். என்றார்.