அரையிறுதிக்கு தகுதி பெற்றது குருநகர் பாடும்மீன் அணி

0
407 views

குழு B இலிலிருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறறது குருநகர் பாடும்மீன் அணி

குருநகர் பாடும்மீன் மற்றும் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் # குருநகர் பாடும்மீன் அணி # வெற்றி

வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்ட மாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியொன்றினை நடாத்தி வருகின்றது..அந்த வகையில் லீக் ஆட்டங்களானது 31//05/2022 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் இன்றைய தினம் (08 /06/2022) இடம்பெற்ற லீக் சுற்று ஆட்டமொன்றில் யாழ்மாவட்டத்தின் பலம் பொருந்திய அணிகளான குருநகர் பாடும்மீன் (யாழ்) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் (வட) விளையாட்டுக்கழகம் மோதியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகமானது 2: 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றின் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது. குருநகர் பாடும்மீன் அணிசார்பாக அணிசார்பாக லியோ மற்றும் தினேஸ்குமார் தலா ஒவ்வொரு கோலினை பெற்றுக்கொடுத்தனர். கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிசார்பாக பெறப்பட்ட ஒரு கோலினையும் ஈழவேந்தன் பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக குருநகர் பாடும்மீன் அணியின் முன்கள வீரர் கீதன் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற குருநகர் பாடும்மீன் அணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் சிறப்பாக செயற்பட்ட கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here