ஏப்ரல் 14 முதல் இலங்கையர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் விசா! அறிவித்தார் மோடி

0
880 views

 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியா செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைதரு விசா (ஒன் எரைவல் விசா) வழங்கப்படும் என இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேனவுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.இந்திய பிரதமர் மேலும் குறிப்பிடுகையில் மக்களே எமது உறவின் இதயம். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் மக்கள் தொடர்பை அதிகரிப்பதற்கு பல தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம்.
சுற்றுலாத்துறை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வகையில் இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப்பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் இந்திய விமான நிலையத்துக்கு வந்த பின்னர் வீசா பெறுதல் சலுகையை ( ஒன் எரைவல் வீசா) அனுபவிக்கலாம். அதாவது இலங்கையிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்திய விமான நிலையத்திலிருந்து விசா பெற்றுக்கொண்டால் போதுமானது.

இதனை எதிர்வரும் தமிழ்இ சிங்களப் புத்தாண்டு காலத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளோம். இந்தியாவின் எயார் இந்தியா விமான நிலையம் கொழும்புக்கும்இ புதுடில்லிக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
விரைவில் இலங்கையில் இந்தியத் திருவிழா ஒன்றை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதில் பௌத்த பாரம்பரிய விடயங்கள் உள்ளடக்கியிருக்கும் என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here