உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது

0
326 views

உலக கோப்பைகிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், போட்டித்தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 101 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here