மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தலிங்க சுவாமிக்கான புதிய மடத்திற்கான திறப்புவிழா இன்று நடைபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் கழக அங்கத்தவரும். இலண்டனில் SNK fresh fish நிறுவன உரிமையாளருமான மதவடி திரு செல்வபுலேந்திரன் (வெள்ளை) அவர்கள் மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தலிங்க சுவாமிக்கான புதிய மடம் ஒன்றைக் கட்டி அன்பளிப்பு செய்து . அதற்கு அப்பாச்சி மடம் என்று பெயரும் சூட்டியுள்ளார்கள்.
இது பற்றி திரு வெள்ளை அவர்கள் மேலும் கூறுகையில் “தனது தாய் தந்தையரான சிவசுந்தரநடராஜா மனைவி செல்வரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்துள்ளேன் என்றும், மானாங்கானை மக்கள் தனது அம்மாவை அப்பாச்சி என்று அழைத்து அன்போடு உறவாடிய காரணத்தால் இந்த மடத்திற்கு அப்பாச்சி மடம் என்று பெயர் சூட்டியதாக கூறினார்.
அப்பாச்சி மடத்தினை மனமுவர்ந்து கட்டித்தந்த திரு செல்வபுலேந்திரன் (வெள்ளை) குடும்பத்திற்கு , மானாங்கானை கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்திருக்கிறார்கள்.
புதிய அப்பாச்சி மடத்திறப்பு விழாவைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

















