இங்கிலாந்தின் தலைமையில் , கட்டுப்பாடற்று ஓடும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிகழ்வு நடைபெறுகிறது. அக்டோபர்31 இல் தொடங்கி நவம்பர் 12 இல் முடிவடைகிறது.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய தருணமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு கடைசி வாய்ப்பு என்று பலரும் நம்புகின்றனர்.
COP26 (Conference of the Parties) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடு 2021 ஆகும்.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, உலகளாவிய காலநிலை உச்சிமாநாட்டிற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஐக்கிய நாடுகள் ஒன்றிணைத்து நடாத்தி வருவதை – சிஓபி COP என்று அழைக்கப்படுகிறது.
இப்போதைய நேரத்தில் காலநிலை மாற்றம் ஒரு கடந்து போக முடியாத பிரச்சினையாகவும், உலகளாவியளவில் முன்னுரிமை கொடுக்க வேண்டியதுமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு 26 வது வருடாந்த உச்சிமாநாடு – COP26 என்ற பெயரோடு . இங்கிலாந்தின் தலைமையில் COP26 கிளாஸ்கோவில் (Glasgow )நடைபெறுகிறது.
COP26 க்கு முன்னதாக, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உடன்பாட்டை எட்டுவதற்கு ஒவ்வொரு தேசத்துடனும் இங்கிலாந்து பணியாற்றி வருகிறது. பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டுக்காக பல்லாயிரக்கணக்கான பேச்சுவார்த்தையாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், மற்றும் உலகத் தலைவர்கள் ஸ்காட்லாந்திற்கு வருகை தருகிறார்கள்.
இது ஒரு பெரிய பணி மட்டுமல்ல, அது மற்றொரு சர்வதேச உச்சிமாநாடு மட்டுமல்ல. COP26 ஒரு தனித்துவமான அவசரத்தைக் கொண்டுள்ளது என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, மற்றொரு சிஓபிக்கு திரும்புவது அவசியம்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் COP21, 2015 இல் பாரிஸில் நடந்தது.
முதன்முறையாக, ஒரு முக்கியமான விஷயம் நடந்தது. புவி வெப்பமடைதலை 2 டிகிரிக்குக் குறைத்து, 1.5 டிகிரிக்கு இலக்காகவும், மாறிவரும் காலநிலையின் தாக்கங்களுக்கு ஏற்பவும், இந்த இலக்குகளை நிறைவேற்ற நிதி கிடைக்கச் செய்யவும் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன. .
பாரிஸ் ஒப்பந்தம் பிறந்தது. 1.5 டிகிரி இலக்குக்கான அர்ப்பணிப்பு முக்கியமானது, ஏனென்றால் வெப்பமயமாதலின் ஒவ்வொரு பகுதியும் இன்னும் பல உயிர்களை இழக்கவும், வாழ்வாதாரங்கள் சேதமடையவும் நேரும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் தங்கள் புகை வாயுக்களை எவ்வளவு குறைக்கும் என்பதைத் தீர்மானிக்கும் தேசியத் திட்டங்களை முன்வைக்க உறுதிபூண்டுள்ளன –
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட திட்டத்துடன் வருவோம் என எல்லா நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதானது அந்த நேரத்தில் அவர்களின் முயற்சியைப் பிரதிபலிக்கும்.
கிளாஸ்கோவில் கூடும் நாடுகள் தங்கள் திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
பாரிஸில் கூறப்பட்ட உறுதிமொழிகள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்கு கட்டுப்படுத்துவதற்கு அருகில் கூட வரவில்லை, இதை அடைவதற்கான நம்பிக்கைகள் தளர்ந்து போயிருக்கின்றன.
2030 வரையிலான தசாப்தம் மிக முக்கியமானதாகவுள்ளது.
எனவே பாரிஸைப் போலவே, வெப்பநிலையை 1.5 வரை உயர வைக்கும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டு ,இந்த COP26 உச்சிமாநாட்டிலும் தீர்க்கமானதாக முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த உலகம் இருக்கின்றது.
இது இப்படியிருக்கையில் COP 26 ற்காக இங்கிலாந்து அரசாங்கம் zero emission என்ற நோக்கை அடைவதற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.










