வல்வெட்டித்துறை நகரசபை தெருக்களின் மின்விளக்குகள் !

0
901 views

 

இருள் சூழ்ந்து காணப்படும் வல்வையின் பல பகுதிகளில் பழுதடைந்த மின்விளக்குகளை நகரபிதா செல்வேந்திர அவர்கள் வல்வை நகரசபை உறுப்பினர்கள் சகிதம் இரவு நேர ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த மின் விளக்குகள் தரவடிப்படையில் புதிய மின் குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும்திங்கட்கிழமை முதல் இலங்கை மின்சாரசபை ஊழியர்களினால் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.
வல்வையின் தெருக்களில் பழுதடைந்த மின்விளக்குகள் பற்றிய மேலதிக விபரங்களை நகரசபையிடம் தெரிவித்தால் அவற்றையும் திருத்த முடியுமென நகரபிதா செல்வேந்திர வல்வை வாழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.
ஆகவே வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்தவேண்டுமாயின் உடனே வல்வெட்டித்துறை நகரசபையிடம் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here