வல்வெட்டித்துறையில் பயன்தரு மரங்கள் நடுகை திட்டம்!

0
548 views

வல்வெட்டித்துறையில் பயன்தரு மரங்கள் நடுகை திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது

வீதிகளில் நிழல் மரங்கள் நடுகை திட்டத்திற்கு சமாந்தரமாக வீடுகளில் பயன்தரு மரங்கள் நடும் பணி நகர பிதா செல்வேந்திரா அவர்களால் இன்று முதல் செயற்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக ஐந்து வீடுகளில் தென்னை மாமர கன்றுகள் நடப்பட்டுள்ளன. மார்கழி மாதம் வரை இத்திட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும். வல்வை மக்கள் பயன்தரு மரங்களை தங்கள் வீடுகளில் நட விரும்பினால் நகரபிதா செல்வேந்திராஅவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை நிறுவனம் இத்திட்டத்திற்கு முழு அனுசரணையும் ஆதரவும் வழங்குகின்றது.
புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை தமிழ்மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு  பல வேலை திட்டங்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
மரநடுகைக்கு அணுசரனை வழங்க விரும்புவோர் புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை பணிப்பாளர் செல்வம் அண்ணா- கனடா (001 (647) 706-7986) அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here