வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆதன மீள்மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்

0
628 views

வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம்
ஆதனமீள்மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்

நகராட்சிமன்றத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து பொதுமக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்குவதற்கு ஒவ்வொருவரும் தமது ஆதனவரியினை நிலுவையின்றி செலுத்துவது அவசியமானதாகும். இப்பிரதேசத்தில் இறுதியாக 2003ம் ஆண்டு ஆதனமதிப்பீடு செய்யப்பட்டு அதன் பிரகாரமே தற்போதும் ஆதனவரிஅறவிடப்பட்டுவருகின்றது. ஐந்து வருடங்களுக்கொரு முறை ஆதன மீள்மதிப்பீடு செய்யப்படல் வேண்டுமாயினும் பல்வேறு தடைகள் காரணமாக இப்பணி முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 14 வருடங்களுக்கு முற்பட்ட பெறுமதியில் ஆதனவரியைஅறவிட்டு,தற்போதைய செலவினங்களை ஈடுசெய்து மக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்கமுடியாதுள்ளது. எனவே இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போதுஆதன மீள்மதிப்பீட்டுபணிகள் நடைபெற்று புதியபெறுமதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நகராட்சிமன்ற அலுவலகத்திற்கு  (காலை 9:00 தொடக்கம் மாலை 3:00 மணிவரை) வருகைதந்து தமது ஆதனங்கள் தொடர்பான விபரங்களையும்ஆண்டொன்றிற்கு செலுத்தவேண்டியஆதனவரி பெறுமதியினையும்அறிந்துகொள்ளமுடியுமெனவும் 2018ம் ஆண்டுமுதல் புதியவரியினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. ஆதன உரிமையாளர்கள் புதிய ஆதனவரி தொடர்பிலான தங்களது அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை எதிர்வரும் 31.12.2017 இற்குமுன்னர் எழுத்துமூலமாக நகராட்சிமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

“வரிகளை நிலுவையின்றி செலுத்துவோம்
சேவைகளை நிறைவாக பெற்றுக் கொள்வோம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here