இலங்கையில் புதிய கட்டுப்பாடுகளுடன் 21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு!

0
505 views

புதிய கட்டுப்பாடுகளுடன் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள் குறித்து இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திhல் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த பரிந்துரைகளின் படி நாடு திறக்கப்படும் முறை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here