இலங்கையில் திருமண விழாக்களுக்கு 17ம் தேதி முதல் தடை

0
464 views

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் படிப்படியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றது.அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரை தவிர வேறு எந்தவொரு நபருக்கும், மாகாண எல்லைகளை கடந்த 13ம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.இந்த நிலையில், எதிர்வரும் 17ம் தேதி முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த முடியாது என கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here