நெல்லியடி பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் முகக் கவசம் அணியாமல், முகக் கவசத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் நகரப் பகுதிக்கு வருகை தந்தவர்கள் 14 பேர் மீது நெல்லியடி பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஆயிரத்தி ஐநூறு ரூபா வீதம் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி அவர்களினால் குற்ற பணம் கட்டுமாறு கட்டளையிடப்பட்டது.







