பெண் விமானி அர்ச்சனாவுக்கு பாராட்டுவிழா டென்மார்க்கில் எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
பகல் 11.30 மணியளவில் மதிய போசனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகிறதுஇ தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
கனடாவில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஸ் ரீவ்கிளீவ் நேரடியாக பங்கேற்கு இசை வழங்குகிறார் அத்தருணம் அவரின் இசையமைப்பில் அர்ச்சனா பாடிய வான் தொடும் வாள் என்ற இசைத்தட்டு வெளியாகிறது.
இந்த இசைத்தட்டின் பாடல்கள் அரங்கில் இசைக்கப்படவுள்ளன, இது தவிர ஜேர்மனி, சுவிஸ், கனடா, நோர்வே, டென்மார்க் நாடுகளில் இருந்து பல்வேறு இசைக்கலைஞர்கள் , நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
டென்மார்க்கின் முக்கிய நடனப்பாடசாலைகளின் சிறப்பு நடனங்கள் இடம் பெறவுள்ளன.
தாயகம் முதல் டென்மார்க் வரை தலைவர்களின் வாழ்த்துக்கள் அரங்கப்படுத்தப்படுகிறன்றன.
கல்வி என்பது படித்து வேலை வாய்ப்பு பெறுவதுடன் முடிவடைவதில்லை அதை சமுதாயம் ஆதரித்து தொடர்ந்து மேலெடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு அமைய இந்த நிகழ்வு ஒரு மகிழ்ச்சிகரமான மாலைப் பொழுதாக அமைய இருக்கிறது.
டென்மார்க்கின் முக்கிய கலைஞர்கள் அரங்கத்தில் நேரடியாக பங்கேற்று வாழ்த்துரைகளை வழங்க இருக்கிறார்கள்.
சுவிற்சலாந்து நாட்டின் இசைப்பாடகி கிளியோப்பற்றாவின் சிறப்பு இசை நிகழ்வு இடம் பெறுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட டென்மார்க்கின் தலை சிறந்த பாடகர்கள் திரையிசைப்பாடல்களை இசைக்க இருக்கிறார்கள்.
நிகழ்ச்சிகளை பிரபல அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜென் தொகுத்து வழங்குகிறார், ரியூப் தமிழ் அனுசரணையுடன் இந்த மகத்தான நிகழ்வு நடைபெறுகிறது.
கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் உட்பட வல்வையின் சங்கங்கள் பல ஆதரவு தெரிவிக்க இருக்கின்றன.