பாடசாலைகளின் விடுமுறை தொடர்ந்தும் நீடிக்கும்

0
516 views

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒருவார காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சுகாதார நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் அடுத்தவாரம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை நடத்துவது உசிதமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா, இல்லையா? என்பது தொடர்பாக, எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here