வல்வை ஶ்ரீமுத்துமாரி் அம்மன் துணை.
நடைபெற்று முடிந்த 2021 வருடாந்த மகோற்ச்சவத்தில் நடைபெற்ற அம்மனின் அற்புதம்.
பன்னிரண்டாம் (12)பகல் திருவிழாவின் போது இந்த அற்புதம் நடந்துள்ளது.
காலை வசந்தமண்டப்பூஜை முடிந்து , வெள்ளி சிங்கவாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து வலக்கரத்திலே வெள்ளி சூலாயுதம் தாங்கி
அம்மன் வெளிவீதி உலாவரும் வேளை அம்மன் ராஐகோபுர வாசலில் இருந்து மண்ணில் பாதம் வைக்கும் வேளை அம்மன் கையில் இருக்கும் வெள்ளி சூலாயுதம் ஒரு விநாடி நேரத்தில் குங்குமநிறமாக மாறி மீண்டும் வழமை போல் காட்ச்சி அளித்தது. இந்த அற்புதத்தை அங்கு தினம் தோறும் ஒளிப்படம் எடுக்கும் ஒளிப்படப்பிடிப்பாளாரால் படம் பிடித்ததன் மூலம், இந்த பரவசநிலையை எல்லோராலும் பார்க்க முடிந்தது.
இது சம்பந்தமாக ஆலய பிரதம குருக்கள் ஶ்ரீ தண்டபாணிதேசிகர் ஜயா உடன் தொடர்புகொண்டு வினாவியதிற்கு ஐயாவின் பதில்
“அம்மாளாச்சியின் அற்புதம்”
இந்த அம்மனின் பரவச அற்புதநிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த அற்புத நிகழ்வு இந்த வருட அம்மன் திருவிழாவை நாள் தவறாது புகைப்படம் எடுத்து பதிவு செய்த திரு. தில்லையம்பலம் இரட்ணசிகாமணி (மணி அண்ணா)அவர்களால் பதிவு செய்யப்பட்டது













