வடக்குக்கு வந்தது இனிப்பு (செய்தி)

0
509 views

வடக்குக்கு வந்தது1 89,500 கிலோ சீனி.
தட்டுப்பாடு விரைவில் நீங்கும்!

வடக்கு மாகா­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள சீனித் தட்­டுப்­பாட்டை நிவர்த்­தி­செய்­யும் வகை­யில், ஒரு லட்­சத்து 86 ஆயி­ரத்து 500 கிலோ­கி­ராம் சீனி எடுத்­து­வ­ரப்­பட்­டுள்­ளது. ஒரு கிலோ­கி­ராம் சீனி­யின் ஆகக்­கூ­டிய சில்­லறை விலை 130 ரூபா என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பல­நோக்­குக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் கிளை­கள் ஊடாக பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே சீனியை விற்­பனை செய்­ய­மு­டி­யும். மொத்­த­மாக சீனியை விற்­பனை செய்­ய­மு­டி­யாது என்று வடக்கு மாகாண சபை கூட்­டு­றவு அபி­வி­ருத்தி ஆணை­யா­ளர் மு.நந்­த­கோ­பா­லன் குறிப்­பிட்­டுள்­ளார்.

அதன்­படி, யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு 89 ஆயி­ரம் கிலோ­கி­ராம் சீனி­யும், கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு 39 ஆயி­ரத்து 500 கிலோ­கி­ராம் சீனி­யும், முல்­லைத்­தீவு மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளுக்கு தலா 20 ஆயி­ரம் கிலோ­கி­ராம் சீனி­யும், மன்­னார் மாவட்­டத்­துக்கு 18 ஆயி­ரம் கிலோ­கி­ராம் சீனி­யும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

ஹிங்­கு­ரானை சீனித் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து, மேற்­படி மாவட்­டங்­க­ளின் சங்­கங்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வாக சீனி இறக்­கு­ம­தி­செய்­யப்­பட்­டுள்­ளது என்று மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here