தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வழங்க சம்பள நிர்ணய சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

0
401 views

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு சம்பள நிர்ணயசபை மேலதிக வாக்குகளால் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாளாந்த சம்பளம் 900 ரூபாயும், வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட மேலதிக கொடுப்பனவு 100ரூபாயுமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என இலங்கை காங்கிரஸின் பொருளாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு சம்பள நிர்ணய சபை மேலதிக வாக்குகளால் ஒப்புதல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here