வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் தரம் 5 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களிற்காக கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள் இந்த வருடக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிற்காக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான பதிவுகள் நாளை 06.02.2021 (சனிக்கிழமை) மாலை 06.00 மணிக்கு வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
2020ம் ஆண்டு 4ம் தரத்தில் வகுப்புக்களில் கலந்து கொண்டு கல்வி கற்று தற்போது தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நாளை மாலை ஆரம்பிக்கின்றன. தவறாது கலந்து கொள்ளவும்.
தரம் 4 இல் கல்வி கற்கும் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் இடம்பெறும்.
தொடர்புகளுக்கு – 0768049636









