நெல்லியடி சதுரங்கக் கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தும் சதுரங்கம் மற்றும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நாளை காலை 8.00 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியின் உள்ளரங்கில் இடம்பெறவுள்ளன. பூப்பந்தாட்டம் திறந்த போட்டியாக ஆண் பெண்களுக்கான போட்டியாகவும் சதுரங்கம் 6 வயது, 8 வயது, 10 வயது, 12 வயது, 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயதுப் பிரிவுகளுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதில் முதல் மூன்று இடங்களையும் பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பபடவுள்ளன.