கொட்டும் மழைக்கு மத்தியிலும் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் 89 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இடம்பெற்று வருகிறது. கரவெட்டி சுகாதார பிரிவிக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்வுடையவர்கள் என பலருக்கு இப்பரிசோதனை இடம்பெற்று வருகிறது.
இதேவேளை நாளை பிற்பகல் 1.30 மணிக்கு புற்றளை அம்மன் ஆலய முன்றலில் பருத்தித்துறை சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்டவர்களுக்கான பரிசோதனை இடம்பெறவுள்ளது.










