வங்காள விரிகுடாவில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு புரேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது திருகோணமலையிலிருந்து 360 கி.மீ. தென்கிழக்காக நிலைகொண்டுள்ளது.
இன்று (02.12.2020) இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு நகரிலிருந்து தெற்காக சுமார் 35 கி.மீ. க்கு அண்மையாக கரையைக் கடக்கும் புயலானது வவுனியா, கிளிநொச்சி பகுதிகளூடாக மன்னாருக்கு நகர்ந்து மன்னார் ஊடாக அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








