புலோலி சாரையடியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமி இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யன்னல் கதவின் பிணைச்சலில் பாடசாலை கழுத்துப்பட்டியை கழுத்தில் சுருக்கிட்டே அவர் இறந்துள்ளார். வீட்டில் யாருமற்ற நேரத்தில் தனிமையில் இருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சகோதரனின் கழுத்துப்பட்டியை எடுத்து, தனது உயர மட்டத்தில் இருந்த யன்னலின் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ள நிலையில் சுருக்கி இறுக்கி உயிரழந்துள்ளதாகவே விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







