யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் பூட்டப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருமண விழாக்கள் நடத்துவதாயின் சுகாதார பிரிவினரிடம் முன் அனுமதி பெற்று நடாத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் குறித்த ஹோட்டலில் அனுமதி பெறாது சுகாதார நடைமுறையினை பேணாது பிரமாண்டமாக நேற்று முன்தினம் திருமண நிகழ்வினை நடாத்த அனுமதித்ததன் காரணமாக குறித்த ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு நேற்றைய தினம் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.