உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது. 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள.அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய்மான் அன்வர் 106 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி.தரப்பில் சோரன்சென், குசாக், ஸ்டிர்லிங், ஓ பிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 49.2 ஓவர்களில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்ற பெற்றது. இதன் மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனியை அயர்லாந்து வீழ்த்தியது. அயர்லாந்து அணியில் வில்சன் 80 ரன்களும் ஓ பிரையன் 50 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.