யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய சாதனை

0
582 views

வட மாகாணத்தில் முதன்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக அவரது கை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த சத்திரசிகிச்சை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கை துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்ததன் காரணமாக துண்டாடப்பட்ட கை நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சில மாதங்களின் பின்னர் அவரது கை பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் கைகள், கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும்.

வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்க முடியாது போகக்கூடும். இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here