இலங்கையில் புதிதாக 8 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிககை 1055ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் இலங்கையில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களில் 11 பேர் கடற்சிப்பாய்கள் எனவும், ஒருவர் குவைத்தில் இருந்து வந்தவர் என்றும், மேலும் 15 பேர் டுபாயிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.








