நான்கு நாட்டு வல்வெட்டித்துறை நலன்புரி சங்கங்களின் கூட்டிணைவில் வல்வெட்டித்துறை மக்களுக்கு உலர் உணவு விநியோகம்

0
882 views

கனடா, ஐக்கிய ராஜ்ஜம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கங்கள் ஒன்றிணைந்து வல்வெட்டித்துறையில் மக்களுக்கான ஊரடங்கு சட்ட கால உலர் உணவு விநியோகத்தினை ஆரம்பித்துள்ளன.

வல்வெட்டித்துறை J388, J389, J390, J391, J392, J393 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் அவசர உதவி தேவைப்படுகின்ற மக்களுக்காக இந்த உலர் உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக J391 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான உலர்உணவு விநியோகம் 13 ஆம் திகதி ஏப்பரல் மாதம் 2020 அன்று  ஆரம்பிக்கப்பட்டு J389 பிரிவிற்கும் விநியோகிக்கப்பட்ட நிலையில் மற்ற பிரிவுகளுக்கான விநியோகம் இன்றைய நாளில் தொடர்கின்றது.

இந்த உதவித் திட்டத்தில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 695 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

வல்வை மக்களுக்கான இந்த அவசரகால உதவி பணியில் இனைந்துகொண்டிருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நான்கு சங்கங்களும் கூட்டிணைந்து நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தங்கள் ஊர் சார்ந்த சங்கங்கள் தங்களுக்கு கைகோர்த்து தங்கள் ஊர் மக்களுக்கான உதவியை செய்கின்ற இவர்களை முன்மாதிரியாக கொண்டு மற்ற ஊர் சங்கங்களும்  தங்கள் தங்கள் ஊரிற்கான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here