நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் குருதி தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் இணைந்து இரண்டாம் கட்டமான இரத்ததான முகாமை இன்று சனிக்கிழமை (11.04.2020) ஒழுங்கு செய்து வல்வெட்டித்துறை நகரசபை மரக்கறி சந்தை கட்டடத்தில் நடாத்தினர்.
முதல்கட்டமாக கடந்த வாரம் நடைபெற்ற இரத்ததான முகாமில் 13 பேரும், இன்றைய இரண்டாம் கட்ட முகாமில் கலந்து கொண்டு 16 பேருமாக, மொத்தமாக 29 பேர் இவ் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு தமது குருதிக் கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுவாக அனைவரும் குருதியை வழங்குவதற்கு தயங்கும் காலகட்டத்தில், எமது நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட இவ் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு எம் உறவுகளுக்காக குருதியை வழங்க முன்வந்த அனைத்து உறவுகளுக்கும், குருதி வழங்க முன்வந்தும் சில சட்டரீதியான சிக்கல்களால் (குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டு பிரயாணம் செய்தமை) குருதி வழங்க முடியாமல் சென்ற குருதிக் கொடையாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“தாய் தந்த நம் உயிரை – நாமும் இரத்ததானம் வழங்கி தாயாவோம்”



























