யாழ்ப்பாணத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் – சுவிட்ஸர்லாந்திலிருந்து  கிறிஸ்தவ மதகுரு வருகையால் !!!

0
636 views

 

சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொற்று யாழ்ப்பாணத்திலுள்ள பலருக்கு பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கேதீஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த மதகுரு கடந்த 10ஆம் தேதி இலங்கைக்கு வருகைத் தந்து யாழ்ப்பாணத்தில் கடந்த 15ஆம் தேதி மத நிகழ்வுகளை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவர் சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணித்துள்ளதுடன், அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கேதீஸ்வரன் கூறினார்.

குறித்த மத நிகழ்வுகளில் சுமார் 150திற்கும் அதிகமானோர் பங்குப்பற்றியுள்ளதுடன், அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று பிற்பகல் வரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்குப்பற்றியவர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி சுய கண்காணிப்பில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

போதகரின் பயண விபரங்கள்:
1. 10.03.2020 காலை 9 மணி கட்டுநாயக்கா விமான நிலையம்.
2. காலை 10 மணி யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு அமர்த்திய வான்
3. அனுராதபுரத்தில் மங்கோ மங்கோ ஹொட்டலில் பழச்சாறு
4. அரியாலை தேவாலயம் வருகை. தேவாலயத்தில் தங்கி இருந்தமை. தேவாலயம் அருகில் உள்ள உறவினர்களால் உணவு வழங்கப்ட்டது.
5. 13.03.2020 யாழ். ஹட்டன் நசனல் வங்கி, கே.கே.எஸ் வீதி சமிக்ஞை விளக்கு சந்தியில் உள்ள சந்தை.
6. கட்டுநாயக்கா யாழ்ப்பாணம் வரும் வழியில் சாரதியினால் முருகண்டியில் வாகனம் நிறுத்தப்பட்டது.
மேலதிக தகவல் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here