சமனிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி பெற்று சம்பியனாகியது நேதாஜி அணி….
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் மற்றும் First fresh food ltd (லண்டன்) ஆகியோரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வல்வைக்கு உட்பட்ட கழகங்களிடையே நடாத்திய கடற்கரை காற்பந்தாட்ட தொடர் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் சைனிங்ஸ் A எதிர் நேதாஜி அணிகள் மோதின. இப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் முதல் பாதி எதுவித கோல்களுமின்றி முடிவுக்கு வந்தது.
தொடர்ந்த இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கோல் போடும் முயற்சிகள் பலனளிக்காது போக ஆட்டம் 0:0 என சமனிலையில் முடிவுற்றது.
வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நேதாஜி அணி சம்பியனாகியது.
வெற்றி பெற்ற நேதாஜி அணிக்கு எமது வாழ்த்துக்களையும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சைனிங்ஸ் A அணிக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.










