பதுளையில் இடம்பெற்ற 45 வது தேசிய பொதுவிளையாட்டு நிகழ்வில் உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் வடமாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் வடமாகாண தெரிவு அணி 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் கிண்ணத்தை சுவீகரித்தது.
போட்டியில் முற்பாதியில் ஞானரூபன் வடமாகாண அணி சார்பில் முதல் கோலினை பெற்றுக் கொடுத்ததுடன் பிற்பாதியில் நிதர்சன் 1, ஞானரூபன் மேலும் இரு கோல்களை பெற்றுக் கொடுத்து வடமாகாணத்தின் பெரு வெற்றியை உறுதிப்படுத்தினர்.
தொடர் முழுவதும் மாற்று வீரர்கள் உட்பட வடமாகாண பதினொருவர் அணி தங்களது உச்சக்கட்ட திறன்களை வெளிப்படுத்தி இவ் தேசிய ரீதியான சாதனை வெற்றியை பெற்றுள்ளமை சிறப்பாகும்.
அத்துடன் அண்மையில் முடிவுற்ற வடக்குகிழக்கு(NEPL) பிறீமியர் லீக் ஆட்ட அனுபவங்கள் இவ் தேசிய ரீதியான தொடரில் செல்வாக்கு செலுத்தியமை வெளிப்படையாகும். NEPL தொடரில் பிரகாசித்த பலர் மற்றும் தேசிய அணியில் சமகாலத்தில் விளையாடும் நிதர்சன், பியூஸ்லஸ், யூட்சுமன் ஆகிய 3 வீரர்கள் மற்றும் தேசிய வீரர்களான ஞானரூபன், எடிசன் ஆகிய வீரர்கள் என தேசியத்தில் 5 முதல்நிலை வடக்கு வீரர்களுடன் மற்றும் NEPL இல் பிரகாசித்த வீரர்கள் என எமது வடக்கு அணி தெரிவுக்கு இலகு முறையினை இவ் தொழில்முறையான விளையாட்டு உதவியது என்பதும் சிறப்பாகும். ஞானரூபன் தலைமையிலான வீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.









