பற்றி எரிகிறது அமேசன் காடு

0
848 views
உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசன் காடு ஆகும். இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் அமேசன் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசன் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த காட்டுத் தீ சம்பவத்துக்கு மக்களின் செயல்களே காரணம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அமேசன் காடுகளில் பெரும் அளவில் எரியும் காட்டு தீ விபத்து சம்பவத்துக்கு, மக்கள் காட்டு பகுதியில் தங்களின் பயன்பாட்டுக்காக வைக்கும் தீயே பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது.

பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி அமேசன் காடுகளில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் 80 சதவிகிதம் அதிகமான காட்டு தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் அமேசன் காடுகள் கடந்த ஜூன் மாதத்தில், முந்தைய காலங்களை விட 88% அதிகமாக அழிக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் தங்களின் நில தேவைக்காக அமேசன் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

‘World Wildlife Fund For Nature ‘ என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, “ பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் காபன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்” என எச்சரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here