சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலகத்தால் விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடத்தப்பட்டது.
கரவெட்டிப்பிரதேச செயலகமும் சமுர்த்தி அபிவிருத்தித்திணைக்களமும் இணைந்து இப்பேரணியை ஒழுங்கு செய்திருந்தது.


பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி பருத்தித்துறை பிரதான வீதியூடாக இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










