29.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மிச்சம் பகுதியில் வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200 இற்கு மேற்பட்ட கழக அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர். கூழ், கோழிப்புக்கை, கோழிப் பொரியல்கள், சிறுவர் உணவுகள், மரக்கறி உணவு வகைகள், புறூட் சலாட், ரோல், வடை, கேக், சர்பத் என்று பலவகையான உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்களுடன் பெண்களுக்கான பாடும் பந்து, ஸ்ரோ எறித்தல், கயிறு இழுத்தல் ஆண்களுக்கான குண்டு எறிதல், கயிறு இழுத்தல் தம்பதிகளுக்கான தேசிக்காய் கரண்டி ஓட்டம் என்று பல விளையாட்டுக்களுடன் ஒன்றுகூடல் இங்கிலாந்து வாழ் உதயசூரியன் கழக அங்கத்தவர்களுக்கு ஒரு மகிழ்சியான மாலைப் பொழுதாக அமைந்தது.
Home உதயசூரியன் கழகம் வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது (பகுதி 1)





















































































































