வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரினை தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக நடாத்தி வருகின்றது.
கடந்த வருடம் இறுதிப்போட்டியில் களமிறங்கிய அதே அணிகளான சைனிங்ஸ் மற்றும் இளங்கதிர் அணிகளே இவ் வருடமும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இவ் வருடம் தொடரில் 10 அணிகள் களமிறங்கி இருந்தன.இளங்கதிர் அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அதாவது லீக் சுற்றில் தீருவில்,உதயசூரியன், சைனிங்ஸ்யுA ரேவடி B அணிகளையும் பிளே ஒப் சுற்றில் ரேவடி அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சைனிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகள் 1 தோல்வியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் உதயசூரியன்,தீருவில்,ரேவடிB அணிகளுடன் வெற்றியும் இளங்கதிர்A அணியுடனான போட்டியில் தோல்வியுமாகும் பிளே ஒப் சுற்றில் நேதாஜி, ரேவடிA அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










