லண்டன் வல்வை நலன்புரிச் சங்க பொதுக் கூட்டம் -2015 புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது

0
939 views

வல்வை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது. அறுபதிற்கும் மேற்பட்ட வல்வை மக்கள் சமூகமளித்திருந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு போதியளவு மக்கள் சமூகமளிக்க வில்லை. அத்தோடு புதிய நிர்வாகத்தை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், திரு பா.ரிஷிச்சந்திரன் அவர்கள் முன்வந்து, தற்காலிகமாக தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தார்.

அதன் படி இன்றைய கூட்டத்திற்கு திரு.ரிஷிச்சந்திரன் அவர்கள் தனது முயற்சியில் அதிகளவு வல்வை மக்களை வரவழைத்ததோடு, சங்கத்தில் தன்னுடன் பணியாற்ற (11) பதினொரு பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினரையும் அறிமுகம் செய்து வைத்திருந்தார். வழமைக்கு மாறாக இந்த வருடத்திற்கான புதிய நிர்வாகத்திற்கு இளைஞர்கள் களம் இறங்கியிருப்பதை எல்லோரும் ஏகமனதாக ஏற்று மனதார வாழ்த்தினார்கள்.

 

நிர்வாக சபை உறுப்பினர்கள்.
தலைவர் : பாலசச்சந்திரன் ரிசிச்சந்திரன்.
செயலாளர் : ஸ்ரீதரன் பகிரதன்.
பொருளாளர் : சத்தியசீலன் வசிகரன்.
கல்வித்துறை : மார்க்கண்டு சற்குணராஜா
விளையாட்டுத்துறை : சந்தானகிருஸ்ணன் ஜெயகிருஸ்ணன்.

               நிர்வாக அங்கத்தவர்கள்.
வல்லிபுரம் பிரபாகரன்.
கந்தசாமித்துரை விமலன்
பழனிவேல் காண்டீபன்
பூரணானந்தன் குமரன்
பரமானந்தவேல் ராதாராம்.

பரமகுருசாமி மோகனராஜ்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here