
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதல் இந்திய வீரர்கள் நிலைத்து நின்று, இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர். ஆனால் இறுதியில் இந்திய வீரர்கள் பெரிதும் சொதப்பிவிட்டனர். இந்திய வீரர்கள் கையில் இருந்த ஆட்டம் சற்று பாகிஸ்தானின் பந்துவீச்சு பக்கம் செல்லும் விதமாக இருந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 300 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியின் வீரர் சோகில்கான் 5 விக்கெட்களையும், ரியாஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சோகில்கான் இறுதி நேரத்தில் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.
இதனையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் வீரர் யுனிஸ்கான் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஓரளவு நிலைத்து ஆடினர். அடுத்த விக்கெட் 18- வது ஓவரிலே இந்தியாவிற்கு கிடைத்தது. 48 பந்தில் 36 ரன்கள் எடுத்து இருந்த போது ஹாரிஸ் சோகைல், அஸ்வின் வீசிய 18 ஒவரில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது..அகமது ஷேசாத் 47 ரன்னிலும், சோகைப் மசூத், உமர் அக்மல் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தது 106 ரன்கள் எடுத்திருந்தபோது உல் ஹக் 9 ரன்களுடனும், அப்ரீடி ஒரு ரன்னுடனும் விளையாடினர். அப்ரீடியின் ஆட்டம் நீடிக்க வில்லை. அப்ரீடி 22 ரன் களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ரியாசும் பாகிஸ்தான் வீரர்களின் அதிர்ச்சியை அதிகரித்தார். 4 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார். ஆனால் உல் ஹக் மட்டும் கேப்டன் என்றபெயரில் அணியின் மானத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடினார். அதன்படி நிலைத்து ஆடினார். ஆனால் எடுபடவில்லை. அவரது ஒருவரின் முயற்சி மட்டும் போதாது என்பது நிரூபிக்கப்பட்டது. உல் ஹக்குடன் இணைந்து விளையாடிய யாசீர் ஷாக் 13 ரன்களில் மொகித் சர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடி காட்டிய மிஸ்பா உல் ஹக் 76 ரன்களில் அவுட் ஆனார் முகமது சமி பந்து வீச்சில், ரெகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி நடையை கட்டினார். பாகிஸ்தானின் கேப்டனான உல் ஹக் மட்டுமே அணியில் 50 ரன்களை தாண்டி விளையாடியவர். சோகைல்கான் 7 ரன்களில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 224 ரன்களில் ஆட்டம் இழந்தது..இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்திய அணியில் யாதவ் 2, மொகித் சர்மா 2, சமி 4, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
டோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் மற்றும் முத்தரப்பு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் அடிமேல் அடி வாங்கியதால் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அணித்தேர்வு சரியில்லை என்ற சர்ச்சைகளும் புற்றீசல் போல் கிளம்பின. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையே ஏற்பட்டது. அது நிறைவேறியது. இந்திய அணியின் மீது ரசிகர்களிடம் இருந்த அதிருப்தி சற்று முடிவுக்குவந்தது. சமூக வலைதளங்களிலும் இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அத்துடன் உலக கோப்பையை இரட்டை தித்திப்புடன் தொடங்கியதால் நம்பிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. 1992, 1996, 1999, 2003, 2011–ம் ஆண்டுகளில் பாகிஸ்தானை இந்திய அணி வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்த நீண்ட கால பெருமையை தக்க வைக்க வேண்டிய கடமையும் இந்தியாவுக்கு இருந்தது. அதனை இந்திய அணி நிறைவேற்றியது.
இந்த முறை சச்சின் தெண்டுல்கர் இல்லாமல் இந்திய அணி முதல்தடவையாக பாகிஸ்தானை எதிர்கொண்டு வீழ்த்தியது. மிஸ்பா உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு நிகராக. சரிசம சவாலுடன் விளங்கியது. இந்தியாவை தோற்கடித்து வரலாறு படைப்போம் என்று பாகிஸ்தான் வீரர்கள் சூளுரைத்து இருந்ததால் இன்றைய கிரிக்கெட்டின் யுத்தத்தில் அனல் பறந்தது. ஆனால் களத்தில் நெருக்கடியை எந்த அணி திறம்பட சமாளித்த இந்திய அணியின் கையே ஓங்கியது. பாகிஸ்தான் மீண்டும் தோல்வியுடன் நடையை கட்டியது. இந்திய அணி 6 வது முறையும் வெற்றி கனியை பறித்து வீறுநடை போடுகிறது.!