வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 20வயதுப்பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையும் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியும் மோதின. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய மெதடிஸ்த அணி 18:10 என முன்னிலை பெற்றது.இரண்டாம் பாதியிலும் அதிரடியாக விளையாடிய அவ்வணி மேலும்10 புள்ளிகளைப்பெற்று 28:13 என்ற புள்ளிகளைப் பெற்று சம்பியனாகியது.
இதில் மூன்றாமிடத்தை வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி பெற்றது.









