அனைத்துப் பதக்கங்ளையும் தன்வசமாக்கியது வட மாகாணம்

0
811 views

தேசிய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் 18 வயது ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனைத்துப் பதக்கங்ளையும் அள்ளியது வட மாகாணம்.

அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு அடையிலான தடகளப்போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.இதில் 18 வயது ஆண்கள் கோலூன்றிப் பாய்தலில் அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த சு.திஷாந் 4.35 மீற்றர் உயரம் பாய்ந்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப்பக்கத்தையும் அதே கல்லூரியைச் சேர்ந்த வி.ருஷான் மற்றும் மகாஜன கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ஜம்சன் ஆகியோர் தலா 3.80 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here