யாழில் அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்!

0
1,110 views

யாழில் அரை மணி நேரத்தில் பெருந்தொகை நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடொன்று உடைக்கப்பட்டு 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுழிபுரம், பண்ணாகத்திலேயே இந்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று இரவு 6 மணி முதல் 6.30 மணிவரை வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்தனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்களைத் தேடியபோது 22 பவுண் நகைகள் திருட்டுப் போனது கண்டறியப்பட்டது.

திருட்டுச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here