போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து உருவானது சூரிய உதயம் பண்ணை .24ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தோட்ட பயிர்கள் இகாய்கறிகள் இபழவகைகள் பயிரிடப்படுகிறது .மூவாயிரம் கோழிகள் வளர்க்கபடுகிறது நன்னீர் மீன் வளர்ப்பிற்கு நில அகழ்வு வேலை முடிந்துவிட்டது . தேசத்தின் பாலம் அமைப்பின் வேலைத்திட்டங்களை ஊக்குவிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் தமது நிதியிலிருந்து ஒரு பகுதியை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்து இஅதற்கான அடிக்கல்லையும்13_08-2018 அன்று பண்ணையில் நாட்டினார் .
தேசத்தின் பாலம் அமைப்பினால் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் 100 குழாய் கிணறு அமைத்து கொடுக்கும் பணியில் இதுவரை 32 பேர் பயன் பெற்றுள்ளனர் .பால்சேனை கிராமத்தில் வாழும் சண்முகம் பாக்கியம் என்ற தாயார் ஒரேயொரு மகனை நாட்டுக்காக தியாகம் செய்தவர் .அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறார் ்எமது முயற்சியின் பயனாக பிரதேச செயலாளர் இவருக்கு கழிவறை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார்இ(தேசத்தின் பாலம் )




























