
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இலங்கை அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஆண்டர்சன் 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் ஓரளவு சிறப்பாக ஆடியது. தொடக்க
விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தில்ஷான் 24 ரன்களில் விட்டோரி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து திரிமன்னே 65 ரன்களிலும் சங்கக்கரா 39 ரன்களிலும் ஜெயவர்த்தனே ரன் எதுவும் இன்றி நடையை கட்டினர். இதனால் இலங்கை அணியின் ரன் விகிதம் குறைந்தது. பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் மேத்யூஸை தவிர பிற வீரர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 46.1 ஓவரில் இலங்கை அணி 233 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது
Home வல்வை விளையாட்டு செய்திகள் உலக கோப்பை கிரிக்கெட்: 98 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து








