கடந்த இரு தினங்கள் மட்டக்களப்பில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாவட்ட அணிகளிடையே மாற்றுத்திறன் உடையோருக்கான உதைபந்தாட்ட மென்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றது.மென்பந்தாட்ட இறுதியாட்டத்தில் வவுனியா அணியை வீழ்த்தியும் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் மட்டக்களப்பு அணியை வீழ்த்தியும் சைனிங்ஸ் நட்சத்திரம் கர்ணன் தலைமையிலான யாழ் அணி சம்பியன் வென்றது.
கடந்த வருட தொடரில் 9 கோல்களை அடித்து தொடராட்ட நாயகன் விருதினை வென்ற கர்ணன் அவர்கள் இந்த வருடமும் இத்தொடரில் 5 கோல்களை அடித்து தொடராட்ட நாயகன் விருதினை வென்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்…











