வடகிழக்கு பிறீமியர் லீங் தொடரில் இரண்டாம் வார மூன்றாவது ஆட்டம் இன்று இரவு 7.30 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
இவ் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஞானரூபன் தலைமையிலான வல்வை எப்.சி அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அஜந்தன் தலைமையிலான கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
வல்வை எப்.சி அணியில் ஞானரூபன், பிறேம்குமார் (பீமா),கலிஸ்ரர், அகீபன், திலிபன், உட்பட யாழின் முன்னனி வீரர்கள் மற்றும் இலங்கை தேசிய அணி வீரர்கள் கொண்டுள்ள அதேவேளை கிளியூர் கிங்ஸ் அணியில் ஜொப் மைக்கல், அஜந்தன், பிரதீஸ், எட்வின் உட்பட கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னனி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்றைய ஆட்டம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற ஆட்டமாக கருதப்படுகிறது.









