வல்வெட்டித்துறை சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று (24-03-2018) வல்வை மக்கள் முன்னிலையில் உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
காலை எட்டு முப்பது மணிக்கு வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோபுரவாசலில் சமாதான நீதவான் திரு தண்டபாணிகதேசிகர் குருக்கள் முன்னிலையில் வல்வெட்டித்துறை நகரசபை சுயேச்சைக் குழு உறுப்பினர்களே இவ்வாறு உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். இந்த நிகழ்வை முன்னாள் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சுந்தரம் திவகலாலா தலைமை வகிக்க ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுயேச்சை குழு தலைவர் திரு சபாரட்ணம் செல்வேந்திர, திரு தங்கவேலாயுதம் சுந்தரலிங்கம், திரு கணேசமூர்த்தி கஜேந்திரன், திருமதி பிரேமதாஸ் ஞானேஸ்வரி ஆகியோர் சுயேச்சை குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டி நகரசபைக்கு செல்லவுள்ளனர்















