சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் மனு கையளிப்பு

0
630 views

அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்துள்ளார்.


சிறைக்கைதியாகி ஆனந்த சுதாகரனனின் மனைவி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் மரணமடைந்தார். இதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் பாதுகாப்பற்று அநாதைகளாக உள்ளனர்.
அவர்களின் நலன் கருதி ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த தேரர் அவரின் விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கை எடுப்பதாக வேலாயுதம் கணேஸ்வரனிம் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here